Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, December 14, 2014

1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிப்பு



ஆதவன்-Submitted by MD.Lucias on Sat, 12/13/2014 -
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் 1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
 
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு  பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளர்களிற்கு உத்தரவிட்டார்.

குறிப்பாக கரைதுறைப்பற்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வயல் காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளுக்காக 1980 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுக்கு ஆதாரமாக காணி உத்தரவுப்பத்திரத்தை வைத்திருக்கின்றனர்.

அக்காணிகளை மீட்டுத்தருமாறு கோரி சுமார் 600 குடும்பங்கள் தமது காணிப்பிரச்சனை தொடர்பாக விண்ணப்பித்திருக்கின்றனர். இதற்கு எதுவித தீர்வும் அம்மக்களிற்கு பெற்றுக்கொடுக்கப்படாமல்; குறித்த பிரச்சனை தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்க வட மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்றவர்களாக பதிவு செய்த 3000 தமிழ்மக்களின் பிரச்சனைக்கும் தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்கவும் இவரால் சகல பிரதேச செயலாளர்களிற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் அனைத்து அறிக்கைகளும் இவ்வருட இறுதியில் காணி அமைச்சால் ஜக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

600 தமிழர்களின் பூர்வீக காணி உரித்தை அவர்களின் முகவரியை அழித்தொழிப்பதற்கு தயானந்தனிற்கு அதிகாரம் வழங்கியது யார்? மன்னார் மாவட்டத்தில் 2000 ஏக்கர் அரச வன ஒதுக்கை சட்டத்திற்கு புறம்பா வழங்க உடந்தையாக இருந்தவரும் இவரே.

சம்பந்தப்பட்டோர் , வட மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தனின் இச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள். இவ்வரலாற்றுத்தவறு இடம்பெறாதிருக்க  இவ்விடயத்தில் உடனடியாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியமாகும்
52 ஏக்கர் காணி படையினரால் 

சுவீகரிப்பு
2014-12-13 12:01:56 | General
தென்மராட்சியில் கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை அனுமதியின்றி அமைத்துவிட்டு தற்போது அந்தக் காணியை பலவந்தமாக படைத்தரப்புக்கென சுவீகரிப்பதற்கு அரசு தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும் அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது படையணி கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க,காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடவும் நீதிமன்றம் பணித்தது.

மேற்படி, 52 ஆவது படையணி அமைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் நிலமும் தனி தென்னந்தோட்டக் காணியாக இருந்தது.

ஒரு தாய்க்கும் நான்கு மகள்மாருக்கும் இது சொந்தமானது. இந்தக் காணிக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த தென்னந்தோட்டத்தை அழித்துவிட்டு அங்கு தங்கள் படையணியின் தலைமையகத்தை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தக் காணியை சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அரசு தரப்பால் ஆரம்பிக்கப்பட்டமையை அடுத்து காணி உரிமையாளர்கள் இதனை ஆட்சேபித்து
நீதிமன்றத்தில் மனு செய்திருக்கின்றார்கள்.

பொதுத் தேவைக்காகத் தனியார் காணிகளை அரசு சுவீகரிக்க முடியும் என்ற சட்ட ஏற்பாட்டை மேற்கோள்காட்டியே இந்த சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் விஜித மலகொட, நீதியரசர் டிலிப் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகள் கே.சயந்தன், லூயி கணேசநாதன் ஆகியோரின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வாதாடினார்.

"பொதுத் தேவைகளுக்கு தனியார் காணியை சுவீகரிக்கலாம்’என்றாலும் இராணுவத்துக்குத் தேவையான ஒன்றை "பொதுத் தேவை’என அர்த்தப்படுத்த முடியாது என்று அவர் விளக்கினார்.

இதனை செவிமடுத்த நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்று எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.