Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, August 14, 2014

காட்டிக்கொடுக்கும் மன்னார் ஆயரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமாம் - பொதுபல சேனா அமைப்பு 
news
logonbanner-113 ஆகஸ்ட்டு 2014, புதன்

நாட்டையும், படையினரையும் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர், அவரைக் கைது செய்வதற்கு அரசு பின்னடிப்பதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வியயழுப்பியுள்ளார்.
மன்னாரில் அண்மையில் விசாரணைகளை மேற்கொண்ட காணாமற்போனோர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளும் ஆணைக்குழு முன்பாக மன்னார் ஆயர், அரசால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்ததுடன், ஆணைக் குழுமுன்பாக சாட்சியமளிக்கவும் மறுத்திருந்தார். 
அத்துடன் ஆணைக்குழுவிடம் அறிக்கை ஒன்றையும் கையளித்திருந்தார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"ஆயர் இராயப்பு ஜோசப் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவற்றையயல்லாம் பார்த்துக்கொண்டு அரசும் மெளனமாக இருக்கின்றது.
இராயப்பு ஜோசப் இலங்கை யின் அரசமைப்பையும் சட்டங் களையும் மீறிச் செயற்படுகின்றார்.
போரின் இறுதிக் கட்டத்தில் எமது படையினர் கொத்துக் குண்டு களை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் இவரே பரப்புரையை முன்னெடுத்தார். பாம்பு கடிக்கிறது என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அந்தப் பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும். 
அதேபோன்று தேசத் துரோகச் செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.  
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=277923325414490421#sthash.6kPdIGvB.dpuf