முல்லை.நாயாற்றில் நிலக்கொள்ளை; தென்னிலங்கை வாசியின் செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லை. மாவட்டத்தில் பெரும்பான்மையினத்தவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கொள்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் நிலக்கொள்ளையின் ஒரு பகுதியாக செம்மலை கிழக்கு நாயாறு கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதியை பெரும்பான்மையின வாசி ஒருவர் திடீரென வேலிகளை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எனினும் இங்குள்ளவர்கள் கடற்றொழிலையே பாரம்பரிய தொழிலாக செய்து
வருகின்றனர்.
அத்துடன் நாயாறு கிராமத்திற்கு கடற்றொழிலை மேற்கொள்ளும் நோக்குடன் தென்பகுதியில் இருந்து வருகை தந்திருந்திருந்து தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இவ்வாறு தொழில் நிமிர்த்தம் வந்தவர்களுள் ஒருவரே இவ்வாறான அடாவடியினை மேற்கொண்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதன்படி நாயாறு மக்கள் வழங்கிய தகவலின் படி நேற்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் சம்பவம் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
அவர் சம்வம் குறித்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட காணியானது புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் அவர்கள் இங்கு வந்திருந்த போது குறித்த காணியை அந்தக் கிராம மக்களுக்கு நன்கொடையாக வழங்குவது என தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் நேற்று காலை முதல் புலனாய்வாளர்களது உதவியுடன் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் அத்துமீறி நுழைந்து குறித்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எல்லையையும் போட்டுள்ளார்.
இதனையடுத்து அங்குள்ள மக்கள் அவரிடம் கேள்வி கேட்க முற்படும் போது நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் பரவாயில்லை இதனை தான் விடப்போவதில்லை என மிரட்டியதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்படவர்களை அழைத்து தெளிவுபடுத்தினேன்.
எனினும் குறித்த இடத்திற்கு வந்த புலனாய்வாளர்களும் சிவில் உடையில் வந்த இராணுவத்தினரும் என்னுடன் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தனர்.
அதற்கு நான் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான காணிகளில் எந்த தமிழனாவது அத்துமீறி காணி அபகரித்ததாக காட்டமுடியுமா என்றும் அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அத்துடன் இங்குள்ள சில அரசியல் வாதிகளும் தனிப்பட்ட மனிதர்களும் செய்யும் அத்துமீறிய செயல்களால் தான் இங்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவை ஏற்றுகொள்ளக் கூடியவை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் நாயாற்றில் பிறிதொரு காணியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அந்தக் காணியைவிடுத்து வேறு நபர்களுக்கு சொந்தமான குறித்த காணிக்கு எல்லையினைப் போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=718552514617299946#sthash.05dmY7AC.dpuf
Tensions rise between Tamils and Sinhala settlers in Mullaitheevu
17 December 2013
Villagers in Mullaitivu have been embroiled in a land-grab dispute after 20-acres of land was fenced off illegally, reports Uthayan.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் நிலக்கொள்ளையின் ஒரு பகுதியாக செம்மலை கிழக்கு நாயாறு கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதியை பெரும்பான்மையின வாசி ஒருவர் திடீரென வேலிகளை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எனினும் இங்குள்ளவர்கள் கடற்றொழிலையே பாரம்பரிய தொழிலாக செய்து
வருகின்றனர்.
அதன்படி இவ்வாறு தொழில் நிமிர்த்தம் வந்தவர்களுள் ஒருவரே இவ்வாறான அடாவடியினை மேற்கொண்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதன்படி நாயாறு மக்கள் வழங்கிய தகவலின் படி நேற்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் சம்பவம் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
அவர் சம்வம் குறித்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட காணியானது புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் அவர்கள் இங்கு வந்திருந்த போது குறித்த காணியை அந்தக் கிராம மக்களுக்கு நன்கொடையாக வழங்குவது என தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் நேற்று காலை முதல் புலனாய்வாளர்களது உதவியுடன் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் அத்துமீறி நுழைந்து குறித்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எல்லையையும் போட்டுள்ளார்.
இதனையடுத்து அங்குள்ள மக்கள் அவரிடம் கேள்வி கேட்க முற்படும் போது நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் பரவாயில்லை இதனை தான் விடப்போவதில்லை என மிரட்டியதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்படவர்களை அழைத்து தெளிவுபடுத்தினேன்.
எனினும் குறித்த இடத்திற்கு வந்த புலனாய்வாளர்களும் சிவில் உடையில் வந்த இராணுவத்தினரும் என்னுடன் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தனர்.
அதற்கு நான் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான காணிகளில் எந்த தமிழனாவது அத்துமீறி காணி அபகரித்ததாக காட்டமுடியுமா என்றும் அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அத்துடன் இங்குள்ள சில அரசியல் வாதிகளும் தனிப்பட்ட மனிதர்களும் செய்யும் அத்துமீறிய செயல்களால் தான் இங்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவை ஏற்றுகொள்ளக் கூடியவை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் நாயாற்றில் பிறிதொரு காணியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அந்தக் காணியைவிடுத்து வேறு நபர்களுக்கு சொந்தமான குறித்த காணிக்கு எல்லையினைப் போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tensions rise between Tamils and Sinhala settlers in Mullaitheevu
Villagers in Mullaitivu have been embroiled in a land-grab dispute after 20-acres of land was fenced off illegally, reports Uthayan.
The land in the village of Naayaaru belonging to Tamils living abroad was fenced off by a Sinhalese man from the south.
Northern Provincial Councillor Ravikaran visited the site of the dispute and discerned that the owners of the land were reportedly in the midst of proceedings to donate the land to the villagers.
The person reportedly occupied the land with the help of surveyors and told the villagers that he did not plan to leave and was unconcerned about whoever the villagers may complain to.
Although the dispute continues, the government announcing that lands belonging to members of the Tamil diaspora could be appropriated will only serve to encourage similar illegal occupations, likely leading to further disputes and confrontations between Tamils in the Northeast and settlers from the south.