5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கு : சட்டத்தரணிக்கு உயிர் அச்சுறுத்தல்.!
by RasmilaD on 2018-01-17
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நால்வருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரதான சாட்சியாளர்களான லெப்டினன் கொமாண்டர் வெல்கெதர, கடற்படை முன்னாள் சிப்பாய் அளுத்கெதர உபுல் பண்டார, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் சார்பில் ஆஜராகி வந்த சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோருக்கே இந்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதில் பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸாநயக்க தலைமையிலான பொலிஸ் குழுவும், சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் வாழைத் தோட்டம் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் அது தொடர்பில் இரு வேறு வழக்குகள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் போது நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் தனியாக இடம்பெறும் விசாரணைகளை அவ்வாறே தொடர ஆலோசனை வழங்கிய நீதிவான் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், பதிவாகியுள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்பட்டோர், சாட்சியாளர்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் விசாரணை செய்து சந்தேக நபர்களை வெளிப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்ப்ட்டு காணாமல் போகச் செய்யப்ப்ட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நேற்று மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலி அமுனவின் கருத்துரையை செவிமடுத்து நீதிவான் இந்த ஆலோசனையை வழங்கினார். அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேடப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிங்களம், ஆங்கில மொழிகளில் பகிரங்க பிடியாணையும் நீதிவான் பிறப்பித்தார்.
முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்ததிருந்தது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர். இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசியவதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸநாயக்க ஆகியோர் கைது பிணையில் உள்ள நிலையில் நேற்று அவர்கள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் வீரரான கஸ்தூரிகே காமினி குற்றப் புலனயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர்களான நிசாந்த சில்வா, இலங்கசிங்க ஆகியோரால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது மன்றில் கருத்து முன்வைத்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா,
காணாமல் போனவர்களில் அடங்கும் அலி அன்வர் ஹாஜியார் என்பவரை இந்த காமினி என்ற சந்தேக நபரே, கட்டுநாயக்கவில் இருந்து தெஹிவளைக்கு முச்சக்கர வண்டியில் வரும் போது கடத்திச் சென்றுள்ளார்.
அத்துடன் பிரதான சாட்சியான வெலகெதரவின் சாட்சிக்கு அமைவாக, 2009 ஜூன் முற்பகுதியில் கன்சைட் வளாகத்தில் கறுப்பு பொலித்தீனினால் சுற்றப்பட்ட சடலங்களை என சந்தேகிக்கப்படுவன்வற்றை இவரே கெப் வாகனத்தில் ஏற்றியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையிலேயே நியாயமான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்தோம். என்றார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வழைமையாக ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலி அமுன, குறிப்பிடுகையில்
, இந்த வழக்கின் விசாரணைகளுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை இப்படியே தொடர விட முடியாது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான எனது கனிஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது தனியாக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பிரதான விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டப்ப்ட்டுள்ளது. இது தொடர்பிலும் விசாரணை தனியாக நடக்கிறது.
வழக்கின் பிரதான சாட்சிகளான, வெல்கெதர, உபுல் பண்டார அகையோருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்ப்ட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
உபுல் பண்டாரவுக்கு அவர் ஏற்கனவே வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிடப்ப்ட்ட விடயங்களை வாபஸ் வாங்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன, மன்ருக்கு வெளியே இவ்வழக்கின் விசாரணைகள் பாதிக்கப்படும் வண்ணம் ஊடகங்களுக்கு கருத்து கூறுகின்றார். இது ஒரு நாடகம் என்கிறார். புலிகள் டயஸ் போராவுக்கு ஏற்றவகையில் விசாரிக்கப்படுகிறது என்கிறார். விசாரணை அதிகாரிகளான நிசாந்த, ஷானி ஆகியோரை மிக கேவலமாக பேசுகின்றார்.' என்றார்.
இதன்போது சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன மன்றுக்குள் நுழைந்த நிலையில், இது தொடர்பில் கருத்து கூற அவகாசம் வழங்கப்பட்டது.
விசாரணைகளை பாதிக்கும் வண்ணம் நான் எதனையும் கூறவில்லை. அந்த குர்ரச்சடடை நான் மறுக்கின்றேன். குற்றப் புலனயவுப் பிரிவு பக்கச்சார்பாக செயல்படுகிறது என்று நான் இம்மன்றில் கூறுவதையே வெளியில் கூறினேன். நான் கூறிய அனைத்தும் உண்மைகளேயாகும், அதனை உறுதி செய்ய என்னிடம் ஆதாரம் உள்ளது.' என அவர் இதன்போது தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அரசின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார அந்த கருத்துக்களுக்கு எஹிர்ப்பு வெளியிட்டார். விசாரணை அதிகாரிகளில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நீதிமன்றில் கூற வேண்டும். அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கூற வேண்டும். அதனை விட்டுவிட்டு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்னம் பிரசித்தமாக கருத்து வெளியிடுவது அவர்களை அச்சுருத்துவதற்கும் அவர்களது விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்வதற்குமான செயலாகும்.
விசாரணை அதிகாரி ஷானி அபேசேகரவின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பிடம் பெற்ற பணம் மூலம் கல்வி கர்பதாகவும் ஒரு இடத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர். ஷானி அபேசேகரவை நான் சந்தித்தேன். அவரது பிள்ளைகள் விமான நிலைய மண்னை ஒரு முறை கூட மிதித்தது இல்லை என அவர் என்னிடம் கூறினார். யேன் அதிகாரிகளின் குடும்பத்தாரை இழுத்து இவ்வாறு அடிப்படையற்ற கருத்துக்களை கூற வேண்டும்.
இது தொடர்ந்தால் தண்டனை சட்டக் கோவையின் 189 மற்றும் பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 8,9 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இக்கருத்துக்களை கூறியவர் சட்டத்தரணி என்பதால் இதனை நான் கூறுகின்றேன். அந்த நிலைமைக்கு செல்ல அவசியம் ஏற்படாது என நம்புகின்றேன்.' என்றார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன வாதிட்டார்.
' ஆரம்பத்தில் இருந்து நாம் இந்த விசாரணைகள் பக்கசார்பானது என்கிறோம். இதில் கப்பம் பெற்றவர்கள் இன்னும் கைது ண்டிஸ் என்பவரும் சடலங்களை ஏற்றியதாக வெலகெதர நாம் இந்த விசாரணைகள் பக்கசார்பானது என்கிறோம். இதில் கப்பம் பெற்றவர்கள் இன்னும் கைது ண்டிஸ் என்பவரும் சடலங்களை ஏற்றியதாக வெலகெதர கூறிய நிலையில் மெண்டிஸ் இன்னும் கைதாகவில்லை.
இவ்வாறு பல முன்னுக்கு பின் முரணான நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே உடன் இந்த விசாரணைகளை குற்றப் புலனயவுப் பிரிவிடம் இருந்து அகற்றி பொலிஸின் வேறு எந்தவொரு பிரிவிடமேனும் ஒப்படைக்க உத்தர்விடவும் என கோரினார்.
இது தொப்டர்பில் விரிவாக எழுத்து மூல வாதங்களை முன்வைக்க இதன்போது நீதிவான் அவருக்கு ஆலோசனை வழ்னக்கினார்.
இந் நிலையில் 8 ஆவது சந்தேக நபருக்கு தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ள நிலையில், பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை என கூரிய நீதிவான் அவரை எதிர்வரும் 25 ஆம் திக்திவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அன்றைய தினம் எழுத்து மூல வாதங்களை முன்வைக்க ஆலோசனை வழ்னக்கிய நீதிவான், பிணையில் உள்ள சந்தேக நபர்கள் எதிர்வரும் பெப்ர்வரி 8 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.