Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, March 5, 2017

கனடிய பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விகளால் தடுமாறிய இலங்கை வெளிவிவகார அமைச்சர்

Canada Mirror
March 03, 2017
கனடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் தொடுக்கப்பட்ட ரவிராஜ் கொலை வழக்கு மற்றும் குமாரபுரம் படுகொலையில், இலங்கை நீதித் துறையின் செயற்பாடுகளை கடுமையாக ஆட்சேபித்ததுடன் அதற்கான சரியான பதிலை வழங்குவதில், இலங்கை அரச தரப்பினர் பல சங்கடங்களுக்கு உள்ளானதை அவதானிக்க முடிந்தது.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல, அரசியல் யாப்புக் குழுவின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரெட்ன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதுவர் ரவிநாத் ஆரியசிங்க, ஓய்வு நில நீதிபதி, மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டத்தொடரில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.Cary Mp
Cary Mp01