நல்லாட்சியின் திட்டங்களை மகிந்த காலத்து அதிகாரிகள் குழப்புகின்றனர்-யாழில் அமைச்சர் மங்கள
நல்லாட்சி அரசாங்கம் பழைய அரசுடன் போராட வேண்டி உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் புதிய திட்டங்களை கொண்டுவந்தாலும் பழைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதனை முறியடிக்கின்றனர். எத்தடை வரினும் எமது திட்ட்ங்களை நிறை வேற்றுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரி விக்கையில்
வெளிநாட்டு வெளிவிவகார கொன்சிலின் பணியகத்தினை யாழ்நகரில் ஆரம்பிப்பதற்கு உதவிய அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றிகள். இதேபோல் வெளிநாட்டு வெளிவிவகார கொன்சிலின் திடடத்தினை மாத்தறையிலும் ஆரம்பிக்கவுள்ளோம்.
இன்னும் சில நாட்களில் இலங்கையின் சுதந்திர தினம் வரவுள்ளது. இலங்கை பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் அடைந்த போது டைம்ஸ் பத்திரிக்கை இலங்கையை ஆசியாவின் சுவிஸ்லாந்து என வர்ணித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை வேறாகிவிட்ட்து . சுதந்திரத்திக்கு பின்னரான காலப்பகுதியில் ஆசியாவிலேயே சிறந்த அரச மற்றும் பொலிஸ் சேவையி னை இலங்கை அரசு வழங்கி வந்ததது.
எங்களுடைய மாகாணங்களின் அபிவிருத்தி விரைவாக நடைபெறவேண்டும். சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் கியூ, தான் பிரதமராக பதவியேற்று தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றுகையில் இலங்கையை விட சிங்கப்பூரை ஐந்து வருடங்களுக்குள் முன்னேற்றுவேன் என கூறி இருந்தார் ஆனால் இப்போது சிங்கப்பூர் இமயத்தை தொட்டு விட்டது. ஆனால் நாம் பின்னோக்கியே நிற்கின்றோம். இவர் தனது சுய சரிதை புத்தகத்திலும் இலங்கைக்காக 10 பக்கங்களை ஒதுக்கி உள்ளார்.
இங்கு இருக்கின்ற வளங்களை பார்க்கின்ற போது நாட்டில் யுத்தம் நிலவாது இருந்திருந்தால் எமது நாடு சிங்கப்பூராக மாறி இருக்கும். நாம் இன, மத, மொழியாக பிரியாது இலங்கையர் என்ற உணர்வோடு இருந்திருந்தால் எமது நாடு பாதாளத்திற்குள் சென்றிருக்காது.
ஆரம்பத்தில் நாட்டில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது விட்டுச்செல்ல அது பூதாகாரமாக உருவெடுத்து யுத்த த்தில் முடிந்தது. யுத்தத்தில் பல பெறுமதி மிக்க உயிர்களை இழந்தோம். யுத்தத்தினால் இறந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசா ங்கத்தினுடைய பிள்ளைகளே. நாட்டின் இறைமையை பாதுக்காக்க போரிட்ட இருதரப்பினரது உயிர்களும் பெறுமதி வாய்ந்த வையே.
நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 2 வருடங்களில் 11தடவைகள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து சென்றுள்ளார். வடக்கும் தெற்கும் ஒருநாடு என்ற அடிப்படையில் ஜன நாயக வழியில் செயற்படுவோம். 2015ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் சிவில் பரிபாலனங்களை மேற்கொண்டு வருகிறோம்.
யுத்த காலங்களில் இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை தற்போது நாம் படிப்படியாக வழங்கி வருகி றோம். ஆனால் இதன் வேகம் மந்த கதியிலேயே செல்கிறது. முக்கியமாக தனியாரின் காணிகளை முதலில் விடுவதற்கு முயற்சிக்கி ன்றோம்.
காணாமல் போக செய்யப்படடவர்களுக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்காண பணிகள் மும்முரமாக நடைபெற்று வரு கிறது. இதற்கான சட்ட ஒப்புதல் நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் கிடைத்து இருக்கிறது. இந்த சட்ட மூலத்திற்கு ஜே.வி.பி சில கரு த்துக்களை முன்வைத்து இருக்கிறது. அவற்றினையும் உள்வாங்கி செயற்படவுள்ளோம்.
கடந்த வருடம் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைக்கும் போது முதலமைச்சர் விக்னேஷ்வரனே வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவினையும் யாழில் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.. இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிமேல் வடக்கு கிழக்கு மக்கள் கொழும்பிற்கு செல்லவேண்டியதில்லை யாழ்பாணத்திலேயே தமது கருமங்களை நிறைவேற்ற முடியும் என மேலும் தெரிவித்தார்