Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, October 21, 2016

நாடடை இழிவுபடுத்திய கோத்தா மீது விசாரணை-விக்கிரமபாகு வலியுறுத்து


நாடடை இழிவுபடுத்திய கோத்தா மீது விசாரணை-விக்கிரமபாகு வலியுறுத்துபாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 நாட்டை இழிவு படுத்திய கோத்தபாய ராஜபக்ஸ மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராணுவத்தை பயன்படுத்தி நாட்டின் நீதித் துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பலரை கடத்தி கொலை செய்த குற்றம் உறுதியாகி உள்ளது.

இவ்வாறான நிலையில், நாட்டிற்கு சர்வதேசத்திடம் இருந்தும் கிடைக்கும் அனைத்து உதவிகளும் இல்லாமல் போகும் என்றும் குறிப்பிட்டார்.

உதாரணமாக, வரிச் சலுகை, ஏனைய உதவி உட்பட அனைத்தும் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் முக்கிய இடத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவரும் மக்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இங்கு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின்,

லசந்த விக்ரமதுங்க படுகொலை , பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவம் போன்ற பல சம்பவங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.