Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, October 15, 2016

விசாரணை முடிவுகளை அறிவிக்கத் தேவையில்லை -ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

விசாரணை முடிவுகளை அறிவிக்கத் தேவையில்லை -ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்
15-Oct-2016

தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை ஜனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்க ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்ப ட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆற்றியிருந்த உரை தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பத்தை தோற்றுவித்திருக்கிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் நீதிமன்றில் முன்னி லைப்படுத்தியமையும் ஜனாதிபதி விமர்சித்திருந்ததோடு, விசாரணைக் குழுக்கள் தன்னை தெளிவுபடுத்தாமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.