Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 5, 2016


[ சனிக்கிழமை, 05 மார்ச் 2016, 01:52.34 PM GMT ]
குளியாப்பிட்டியில் எயிட்ஸ் நோய் குற்றச்சாட்டில் பாடசாலையை விட்டு நீக்கப்பட்ட சிறுவனை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பிரதேச வாசிகளுக்கு எயிட்ஸ் தொடர்பான தெளிவினை வழங்க பிரதிமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், பலரின் விமர்சனத்திற்கு மத்தியில் விரக்தியில் வாழும் அக்குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தேவையற்ற பயம் காரணமாக அப்பாவி மாணவன் ஒருவரின் கல்வியை தடுக்க வேண்டாம் என பிரதிமைச்சர் அப்பிரதேச மக்களை வேண்டிக் கொண்டார்.
அத்துடன் எயிட்ஸ் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதுவும் இல்லை.. அவருடன் எல்லோரும் வழமை போல் பழகும்படி கூறி, பிரதிமைச்சர் ரஞ்சன் அச்சிறுவனை தன்னுடன் அணைத்துக் கொண்டது பலருக்கும் நெகிழ்ச்சியை வரவழைத்தது.
இலங்கை அநேகான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ள நிலையில், குறிப்பாக சிங்கள பிரதேசத்தில் ரஞ்சன் ராமநாயக்கா போன்றவர்களின் செயற்பாடுகளே நிம்மதியைத் தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.