வடக்கு மீள்குடியேற்றங்கள்; மாகாண சபையே தீர்மானிக்க வேண்டும்

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு மாகாண சபையே செயற்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=713284077610476460#sthash.CcBWlhTy.dpuf
10 ஜுன் 2015, புதன்
வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் அவசர பிரேரணையாக கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '
வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் க.வி விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண சபை தயாராகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனயைடுத்து குறித்த தீர்மானம் ஏகமனதாக உறுப்பினர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.