Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 28, 2015

பொறுமையாக இருங்கள் : அமைப்புக்களை நிர்வகித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம்: ரணில் உறுதி 
news
logonbanner-127 மார்ச் 2015, வெள்ளி 8:10 பி.ப
புதிய அரசை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமையை அளித்து புதிய அரசை ஏற்படுத்த சுமூகமாக செயற்பட உதவிய அனைவருக்கும் ஆயர்  நன்றி தெரிவித்தார்.



 
இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற யாழ்.ஆயர் ,பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
புதிய அரசு மக்களுக்கு நல்ல சேவையை செய்யும் என நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இதனூடாக  முக்கியமான சில கோரிக்கைகளை பிரதமரிடம் ஆயர் முன்வைத்தார்.
 
முதலில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்களை இழந்து நடுவீதியில் நிற்கிறார்கள் அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பது ,வாழ்வாதாரங்களை செய்து கொடுப்பது  என்ற திட்டங்களை தாமதிக்காமல் உடனே செய்து தரவேண்டும்.
 
இரண்டாவதாக வளலாய் கத்தோலிக்க மக்கள் இடம்பெயர்ந்ததால் தேவாலயங்கள் ஒன்றும்.இல்லை.எனவே அவர்கள் வழபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலயங்களை அமைத்து தருமாறும் அதற்கான இடங்களை பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டோம். சில தேவாலயங்கள் இடிந்து போய் உள்ளன.அதனையும் மீளபுனரமைத்துத் தரவேண்டும்.
 
மூன்றாவதாக மீனவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.நீண்டகாலமாக அவர்கள் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களது பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
 
 
இதேவேளை மக்களின் முக்கியமான பிரச்சினை அதாவது  காணாமற்போனவர்கள் எங்கு போனாலும் கண்ணீருடன் இருக்கிறார்கள்.அவர்களது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுத்து அவர்களுக்குரிய சுய உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் ஆயர் முக்கிய 4 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
 
 அதற்கு  பிரதமர் ரணில் பதிலளிக்கும் போது,
 
ஆழ்கடல் றோலர் மீன்பிடியை மீனவர்கள் நிறுத்தினால் மீனவர் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க உதவ முடியும். 
 
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இளைஞர் அமைப்பினை ஏற்படுத்தி அவர்களுடன் உறவை வலுப்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
 
மேலும் பிரதமர் ரணில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக புதிய அமைப்புக்களை நிர்வகித்து அதனூடாக தீர்வை பெற்றுத்தர முனைப்பு காட்டுவோம்.
 
 
எனவே அனைவரும் பொறுமையாக இருங்கள் இதற்கான தீர்வை உடனே பெற்றுத் தரமுடியாது. கால அவகாசம் தாருங்கள் மக்களது பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் பிரதமர் ரணில் யாழ்.ஆயரிடம் உறுதியாகத் தெரிவித்தார்.
தார்.