பாடசாலையில் நஞ்சுகலந்த நீர் அருந்திய 26 மாணவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில்
ஏழாலை மயிலங்காடு சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 பாடசாலை மாணவர்களும் பூச்சிமருந்து கலந்த நீரை அருந்தியதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.எனினும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.சிலர் தண்ணீரை அருந்தவில்லை.சிலர் தண்ணீர் அருந்தியுள்ளனர்.தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறி பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக பூச்சிமருந்து கலந்த நீரை அருந்திய மாணவர்கள் 26 பேரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் சிலர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது மயக்கமடைந்தனர்.
இதனால் நீர் அருந்திய 26 பேரும் அதிதீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கையின் பின்னரே அவர்கள் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.