Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, February 17, 2015

மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்:-

மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்:-

காணாமல் போனோர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும் உண்ணா விரதத்தின் போது காட்சிக்கு வைக்கப்பட்ட

மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை முதல் மலை வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் 500க்கும் அதிகமான பெண்கள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.

காணாமல் போனோர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும் உண்ணா விரதத்தின் போது காட்சிக்கு வைக்கப்பட்டடிருந்தன.