Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, January 18, 2015

விமானப்படைக்கு ரூ.830 லட்சம் செலுத்தாமல் ஏமாற்றிய ராஜபக்சே மகன், பசில்!
Posted Date : 11:17 (18/01/2015
கொழும்பு: கடந்த ராஜபக்சே ஆட்சியில் அவரது மகன் நாமல் ராஜபக்ச, சகோதரர் பசில் ராஜபக்சே மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை விமானப்படைக்கு 830 லட்ச ரூபாய் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 8ஆம் தேதி வரையில் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொண்ட பயணங்களுக்காக இந்த பணம் செலுத்தப்பட உள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் உலங்கு விமானங்களை பயன்படுத்திக்கொள்ள கட்டணமொன்றை செலுத்த வேண்டியது அவசியமானது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 8ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் 39 தடவைகள் உலங்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், இந்தப் பயணங்களுக்கான எவ்வித கட்டணங்களையும் இதுவரையில் செலுத்தவில்லை எனவும் இதற்கான மொத்த நிலுவை 830 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

அதிகளவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே உலங்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளார். பெல் 412 மற்றும் எம்.ஐ 17 ரக உலங்கு ஹெலிகாப்டர்கள் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே ட்டும் 24 தடவைகள் உலங்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, கன்னொருவ, மொனராகல, புத்தல, தங்காலை, கல்குடா, யாழ்ப்பாணம், மன்னார், அரலகங்கவில, வீரவில, அலுத்கம மற்றும் கந்தளாய் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நாமல் ராஜபக்சே.

இந்தப் பயணங்களுக்காக பணம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.