கம்மன்பில தனது வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக அரச வங்கி ஒன்றில் 800 கோடி ரூபாவை கடனாக பெற்றிருந்தார்.
அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால், அந்த கடனை இரத்துச் செய்ய முடியும் என அரசாங்க தரப்பினரால் கம்மன்பிலவிடம் வாக்குறுதியளிக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வேளையில் கம்மன்பில அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தால், அதனை முன்னெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியிருக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியினரின் 100 வீதமான ஒப்புதலுடனேயே பொது வேட்பாளருடனான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் உதய கம்மன்பில எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
