Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, November 9, 2014

[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:46.17 AM GMT ]
உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது அரசாங்கம் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது. 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவால் தமிழர் சார்பில் எடுத்துரைத்த விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்த ஒரு முழுமையற்ற தீர்வாவணம்.
உடன்படிக்கையை எக்காரணம் கொண்டும் விரைவில் முடித்துவிட வேண்டும் என்று அக்கால இருநாட்டு முதல்வர்களும் முடிவெடுத்திருந்ததால் 13வது திருத்தச் சட்டம் முக்கியமான அதிகாரங்களை நியாயமான முறையில் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் பகிர்ந்து  கொடுத்துள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடாமலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

Part 5


Part 5



Part 1

Part 2

Part 3