அநுராதபுரத்தில் மலேசிய பெண் ஊடகவியலாளர் மீது வல்லுறவு
JVP News
October 19, 2014
மலேசியப் பிரஜையான பெண் ஊடகவியலாளர் ஒருவரைக் கட்டித் தழுவியதுடன், துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்ற சந்தேகத்ததில் 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரை நேற்று மாலை தாம் கைதுசெய்தனர் என்று அநுராதபுரம் சுற்றுலாத்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், லோலுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், பசவக்குளம் வாவிக்கரையில் அமர்ந்திருந்த மலேசிய யுவதியை நேற்றுக் காலை துஷ்பிரயோகம் செய்ய முயன்றிருக்கிறார். அந்த யுவதி அநுராதபுரம் சுற்றுலாத்துறைப் பொலிஸாருக்குச் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று மாலை குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.