நினைவிலழியா பாலா தம்பு!
இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் – Phillips Bala Tampoe) தனது 92ஆவது வயதில் செப்டெம்பர் முதலாம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி ஒரு சிறந்த வழக்கறிஞரும் கூட. தனது சட்ட வல்லமையை தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே அர்ப்பணித்து வந்தவர். பல தொழிற்சங்க போராட்டங்களின் போது தொழிலாளர்களின் கோரிக்கைகளின் பக்கம் நின்று, கம்பனிகளுக்கு எதிராக வாதாடி, தொழிலாளர்களுக்கு நியாயம் தேடித்தந்தவர்.
மாறி மாறி ஆட்சியமைத்த அனைத்து அரசுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தவர். இலங்கையின் வரலாற்றில் தோழர் பாலா தம்பு அளவுக்கு நீண்டகால தொழிற்சங்கப் போராளியாக எவரும் இருந்ததில்லை எனலாம். உலகில் நீண்டகாலமாக தொழிற்சங்கமொன்றிற்கு செயலாளராக இருந்த ஒரேயொருவர் இவர்தான் என்கிற உறுதிப்படுத்தாத ஒரு செய்தியுமுண்டு.
1948இலிருந்து இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU – Ceylon Mercantile Union) செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த பாலா தம்பு மரணிக்கும் வரை சற்றும் சளைக்காது சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர். இந்த தொழிற்சங்கம் நாளடைவில் இலங்கை வர்த்தக தொழில்நுட்ப மற்றும் பொது தொழிலாளர் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
வாழ்க்கை மேலும் →
வாழ்க்கை மேலும் →