Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, August 16, 2014

கிளிநொச்சியில் பதற்றம்: இராணுவத்தினர் திடீர் நடவடிக்கை


குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
கிளிநொச்சியில் பதற்றம்: இராணுவத்தினர் திடீர் நடவடிக்கை
15 ஆகஸ்ட் 2014

கிளிநொச்சியில் இராணுவத்தினர் திடீர் நடவடிக்கையை இன்று மேற்கொண்டமையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். கிளிநொச்சி நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏ-9 வீதியிலும் புகையிர வீதியிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் செறிவாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி நகரப் பகுதிகளில் சைக்கிள்களில் இராணுவத்தினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கிளிநொச்சியின் புறநகர் கிராமங்களில் சந்திக்குச் சந்தி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் உள்ள சில கிராமங்களில் வீடு வீடாகச் சென்று குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தினர் திரட்டி வருகின்றனர். வழமைக்கு மாறாக இராணுவத்தினர் அதிகரித்துள்ள இந்த நடவடிக்கையினால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.