தேர்தலை குறி வைத்து அரசின் அபிவிருத்திகள் - வடக்கு முதலமைச்சர்

08 ஆகஸ்ட்டு 2014, வெள்ளி
வடமாகாணம் முழுவதையும் நோக்கி முதிர்ந்த திட்டத்தின் அடிப்படையில் வேலை இடம்பெறவேண்டுமே ஒழிய அடுத்த தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்தியில் ஈடுபடுவது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். தேர்தலை முன்னிட்டு திட்டம் இன்றி வேலைகள் கொடுக்கப்பட்டமையால் தான் இன்று தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=360353308209683010#sthash.QtJWiu1N.dpuf
வடமாகாணம் முழுவதையும் நோக்கி முதிர்ந்த திட்டத்தின் அடிப்படையில் வேலை இடம்பெறவேண்டுமே ஒழிய அடுத்த தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்தியில் ஈடுபடுவது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். தேர்தலை முன்னிட்டு திட்டம் இன்றி வேலைகள் கொடுக்கப்பட்டமையால் தான் இன்று தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தை, நவ்வி பிரதேசத்தில் இன்று பிரதேச வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
வடமாகாணத்திற்கு ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டனர் எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் பெரும் பகுதி நிதி தரப்படவில்லை. அதனை அரசாங்கமே வைத்து விளையாடுகின்றது எமக்கு தந்துவிட்டதாக கூறும் பணத்தின் பெரும் பகுதி எமக்கு தரப்படப்படவில்லை. நாளாந்தம் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் நிதி தந்துவிட்டனர் எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவை தரப்படவில்லை.
அதில் சுமார் ஐந்தில் இரண்டு பங்குதான் கிடைத்துள்ளது. மிச்சம் அனைத்தையும் அரசாங்கமே வைத்து விளையாடுகிறது . விளையாடுகிறது என்று நான் ஏன் கூறுகின்றேன் என்றால் என்ன செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் எங்கே செய்கிறார்கள் யாருக்கு செய்கிறார்கள் என்பவை எல்லாம் மர்மமாகவே உள்ளன.
மேலும் இந்த வைத்தியசாலை அமைப்பதற்கு வட மாகாணத்திற்கு குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாவும் சுகாதார சேவையின் பிரித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் இருந்து அறுபது லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டங்கள் போன்று மேலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நிதிப்பற்றாக்குறையே பிரதான காரணமாகவுள்ளதhகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.