Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, July 16, 2014

மகிந்தவை வெட்டி ஓடும் முதல்வர் -அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது!


POSTED BY SIVA KUMAR -July 15, 2014

மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி 
மகிந்த ராஜ­பக்ஷவிற்கும் இடையில் இடம்­பெ­ற­வுள்ள சந்­திப்பில் கலந்­து­கொள்­ளு­மாறு விடுக்­கப்­பட்ட அறி­வித்­த­லுக்கு வேலைப்­பளு கார­ண­மாக தன்னால் கலந்­து­கொள்ள முடி­யா­துள்­ளது என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண சபையின் 12 ஆவது அமர்வு நேற்று இடம்­பெற்­ற­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், 

ஜனா­தி­ப­தி­யுடன் கடந்த ஜன­வரி மாதம் 2ஆம் திகதி இடம்­பெற்ற சந்­திப்பில் பத்து விட­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஆனால் இங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்­களில் ஏதா­வது ஒன்­றுக்­கா­வது தனது அனு­ச­ர­ணையைத் தந்­தி­ருந்தால் எங்­க­ளுக்கு வச­தி­யாக இருந்­தி­ருக்கும். 

நான் வசதி என்ற சொல்லை தான் கூறு­கின்றேன். ஆனால் அது­கூட இன்னும் செய்­து­த­ரப்­ப­ட­வில்லை. எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் சில விடயங்களைக் குறிப்­பிட்டோ அல்­லது அதற்கு மாறா­கவோ நாம் செயற்­ப­ட­வில்லை.

ஏற்கனவே தமக்கு உறுதியளித்தபடி வடக்கின் ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார். எனினும் தற்போது அதனை அவர் மீறிவிட்டார் என்று விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே அவருடைய அமைச்சரவை பகிஸ்கரிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முத­ல­மைச்­சர்­க­ளுக்கு கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. எனினும் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வி­ருந்த கூட்டம் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால், எனக்கு அக்­கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­ட­வில்லை.

கடந்த வாரம் முத­ல­மைச்­சர்­க­ளுக்கு கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ள­தாக கடி­த­மொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மா­தத்­திற்குள் அக்­கூட்டம் நடை­பெறும் என திகதி குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் எனக்குப் பல வேலை­களும் கட­மை­களும் இருப்­பதால் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள முடி­ய­வில்லை என கடிதம் அனுப்­பி­யி­ருக்­கின்றேன்.

ஆகவே, எங்­களுக்­குள்ளே அது சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதைப் போல் நாங்களும் ஒத்துப்போகின்றோம். ஆனால் எங்களுக்குக் கூறுகின்ற எந்தவொரு விடயமும் செய்துதரப்படவில்லை என்றார்.