11 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சிப்பாய்கள் பிரத்தியேக நீதிபதி முன்னிலையில் விடுதலை:-
18 ஜூலை 2014
காரைநகரில் 11 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கடற்படை சிப்பாய்களை இன்று சிறுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடற்படை சீருடையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஏழு கடற்படை சிப்பாய்களைில் சந்தேக நபரை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்ட சிறுமி தவறியிருந்தார்.
அதையடுத்தே கடற்படை சிப்பாய்களை விடுவிக்க சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையினரால் பாடசாலை சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்து குறித்த கடற்படை முகாம்களைச் சேர்ந்த 7பேர் இன்று காலை ஊர்காவற்றுறை பொலிஸாரினால் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இருந்தனர்.

குறித்த பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கியதாக கைதான கடற்படைசிப்பாயை தடுத்து வைக்க முன்னதாக உத்தரவிட்ட நீதிபதி அடையாள அணிவகுப்பை நடத்த முடியாதென தெரிவித்திருந்தார். இதையடுத்து பதில நீதிபதி முன்னிலையில் கடற்படையினரென தெரிவித்து எழுவரை காவல்துறை முற்படுத்தி அடையாள அணிவகுப்பினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.