Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, May 17, 2014

முள்ளிவாய்க்கால் துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் நிலாவரையில் கைது
2014-05-16 22:12:08 | General
முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனக்கும் மேற்படி துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் யாரோ வீட்டிற்குள் வந்து எறிந்துவிட்டுச் சென்றதனையே தான் எடுத்து வைத்திருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதானவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்ற துண்டுப்பிரசுரங்கள் பல பகுதியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://thinakkural.lk/article.php?local/oemwsgkddd9422e9d36f808f222413dczs1dda1039aa9b194ba12104upkdd#sthash.7yqc1Usq.d8BtdHM5.dpuf