Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, May 15, 2014

கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட மக்களை கூட்டாக அஞ்சலிக்க முடியாதாம் 
news
logonbanner-112 மே 2014, திங்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூறும்  வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் தெரிவித்துள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
 
இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று குறிப்பிட்டார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,அவர்களை நினைவுகூர்ந்து பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
 
எனினும் அரசு போர் வெற்றியை கொண்டாடும் வகையில் தென்னிலங்கையில் பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் மட்டும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தனியாக வீடுகளில் நினைவஞ்சலி சடங்குகளை அனுமதிப்பதாக இலங்கை அரசும் இராணுவமும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
"இறுதி போரின் போது கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்பட்டார்கள், அப்படியிருக்கையில் கூட்டமாக அவர்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது எனக் கூறுவது சரியல்ல"
தேவையில்லாத அடக்குமுறையை இலங்கை இராணுவம் கைகொள்வதாகவே தமிழ் மக்கள் இந்த நடவடிக்கையை காண்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=411942992113155207#sthash.RZrycOd6.1rRGExh3.dpuf