Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, April 19, 2014

புலிகளின் மீள்இணைவு நாடகமும் திருமலையின் முன்னாள் 2ஆம்நிலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையனின் பங்கும்:

செய்தி ஆய்வு - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-18 ஏப்ரல் 2014
புலிகளின் மீள்இணைவு நாடகமும் திருமலையின் முன்னாள் 2ஆம்நிலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையனின் பங்கும்:
இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளதும் திட்டமிட்ட கூட்டுப் படு கொலைகளே புலிகளின் முன்னாள் போராளிகளது மரணங்கள் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கோபி, தெய்வீகன், அப்பன் ஆகியோரை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தேடப்படும் பட்டியலில் இணைத்து சுவரொட்டிகளை ஒட்டியதில் இருந்து அவர்கள் பதவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும்வரை  நிகழ்ந்தவை  ஒரு திட்டமிட்ட நாடகம் என ஆரம்பத்தில் இருந்தே குளோபல் தமிழ்ச் செய்திகள் தெரிவித்து வந்தது. உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல ஊடகங்களும், சில தரப்புகளும் தத்தமது நலன்கள் இருப்புகளின் அடிப்படையில் இந்த விடயத்தை வியாக்கியானப்படுத்திய நிலையில், குளோபல் தமிழ்ச் செய்திகள் புலிகளின் மீள் இணைவு என்ற இந்த விடயத்தை இலங்கை அரசாங்க – பாதுகாப்பு – புலனாய்வுப் பிரிவுகளின் நாடகம் என வலியுறுத்தி வந்தது. குளோபல் தமிழ்ச் செய்திகளின் இயலுமைக்கு எட்டியவகையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை இயன்றவரை உறுதிப்படுத்தி  இங்கு ஒரு செய்தி ஆய்வாக இந்த விடையம் தரப்படுகிறது. இதன் மீது ஆரோக்கியமான கேள்விகள் விமர்சனங்கள் இருப்பின் அதனை விமர்சனப் பகுதியிலோ அல்லது மின் அஞசலுக்கோ அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்.                                                         வாசிக்