Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, April 11, 2014

அரச நாடகத்துக்காக பலியெடுக்கப்பட்ட தமிழ் இராணுவ அதிகாரியின் உயிர்!? (2ஆம் இணைப்பு)

Tamillitar l Tamil Leader
Paliyetukkappatta Tamil military officer for the state of play alive!?  (2nd link)சிங்கள இராணுவமும் அரசும்  இணைந்து நடத்திய நாடகத்தின் இறுதியில் முன்னாள் போராளிகள் மூவரை சுட்டுப்படுகொலை செய்ததுடன் அந்தச் சம்பவத்துக்கு ஆதாரமாக இராணுவத்தில் இருந்த தமிழ் இராணுவ அதிகாரி ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கடந்த இரவு வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தில் கோபி என்ற நபரும் அவருடைய சகாக்களும் தப்பிச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோக மோதலில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருடைய சடலம் பதவியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பும், பொலிஸ் தரப்பும் அறிவித்திருந்தன.

இந்நிலையில் பின்னர் முரண்பட்ட கருத்தினை படைத்தரப்பு வெளியிட்டுள்ளது, குறித்த மோதல் சம்பவத்தில் படையினர் எவரும் கொல்லப்படவில்லை என்றும் பயிற்சியின் போதே இராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பினும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரி ஒரு தமிழர் என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

சம்பவத்தில் இலங்கை இராணுவத்தின் 7 ஆவது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற அதிகாரியே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மீண்டும் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் அரசு நடத்திய நாடகத்தினை சர்வதேசம் நம்பவேண்டும் என்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றதன் மூலம் தனது நடவடிக்கையை படைத்தரப்பு நம்பவைப்பதற்கு முயன்றிருக்கின்ற அதேவேளை உயிரிழந்தவர் ஒரு தமிழன் என்பதுடன் அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் என்பது மிக முக்கியமாக நோக்கப்படவேண்டியது என்கின்றனர் நோக்கர்கள்.

இரண்டாம் இணைப்பு:-
அரசாங்கம் மேற்கொண்ட நாடகம் தொடர்பிலும் நாடகத்தில் முன்னின்று உழைத்த தமிழ் இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளியாகியுள்ள நிலைில் மற்றொரு தகவலை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள். இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927) என்பவருக்கு கீழ் பணியாற்றி வந்துள்ளனர்.
கமலராஜா மற்றும் ஏனைய மூவரும் நண்பர்கள். கமலராஜாவே தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இராணுவத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இவர்களின் கொலை மற்றும் சூழ்ச்சி நாடகம் பற்றி உண்மை வெளியாகிவிடும் என்பதால் கமலராஜா என்ற இராணுவ புலனாய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான கமலராஜா பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக முதலில் இராணுவம் கூறியிருந்ததுடன், பயிற்சியின் போது இறந்ததாக பின்னர் கூறியது.

அந்த சிங்கள இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
விடுதலைப் புலிகள் என்ற நாடகத்தை நடத்த இராணுவம் பெரும் செலவுகளை மேற்கொண்டது.

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரத்தோடை விடத்தல் தீவு காட்டுப் பகுதிகளை இராணுவம் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தது.

2 ஆயிரத்து 500 இராணுவத்தினர், 18 வாகனங்கள் இந்த சுற்றிவளைப்புக்கு பயன்படுத்தப்பட்டன. புலிகளின் புதிய தலைவர் காட்டில் மறைந்திருப்பதாகவும், அவரைத் தேடி இந்த தேடுதல் நடத்தப்படுவதாகவும் பிரசாரம் செய்யப்பட்டது.

பதவியா வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் இராணுவம் சடலம் ஒன்றை கொண்டு வந்து ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட சடலம் யாருடையது என்பது பற்றி தமக்கு தெரியாது என இராணுவத்தினர் பதவிய பொலிஸாரிடம் கூறியுள்ளனர். சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருந்தன.

இதன் பின்னர் இன்று காலை 6 .10 மணியளவில் இராணுவத்தினர் சடலமாக ஒப்படைக்கப்பட்ட இராணுவ வீரரின் விபரங்களை பதவியா பொலிஸாருக்கும் வழங்கினர்.

இராணுவ வீரர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், எஸ்.கே. ராஜா என்ற தமிழர் எனவும், அவரது இலக்கம் 776927 எனவும், அவர் திடீர் விபத்தில் இறந்ததாகவும் இராணுவம் பொலிஸாரிடம் வழங்கிய விபரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த தகவலுக்கு மாறுபட்ட தகவலை இராணுவத்தினர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 2.40 மணியளவில் விடுதலைப் புலிகளுடன இடம்பெற்ற மோதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் வீரர் எஸ்.கே. ராஜா என்பவர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்ததாகவும், அவரது சடலம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2.40 மணிக்கு எஸ்.கே. ராஜா மோதலில் கொல்லப்பட்டதாக புளியங்குளம் பொலிஸாரிடம் கூறப்பட்டாலும் 1.20க்கு சடலம் பதவியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுடனான மோதலில் புலனாய்வுப் பிரிவின் வீரர் கொல்லப்பட்டதாக புளியங்குளம் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், ராஜா பயிற்சியின் போதே இறந்ததாக இராணுவப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எஸ்.கே. ராஜா என்ற செல்வராஜா கமலராஜா உத்தியோகபூர்வமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் எனவும், கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் உளவாளியாக செயற்பட்ட அவரது நண்பர்கள் என இராணுவத்தின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.