இலங்கையில் ஐ.நா.வின் சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவவேண்டியது அவசியம்: மன்னிப்புச் சபை வலியுறுத்து
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் படி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதே மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில் நிறுவவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி அங்கு மேலும் கூறியதாவது
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதே மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விடயங்களில் பதிலளிக்கப்படாத தன்மை காணப்படுகின்றது. இலங்கையில் அரசாங்கத்தரப்பு மற்றும் புலிகள் அமைப்பு என்பன மேற்கொண்டதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பில் மன்னிப்புச் சபைக்கு சாட்சியங்கள் கிடைக்கின்றன.
எனவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் படி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதே மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில் நிறுவவேண்டும் .
ஐ.நா. மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில் நிறுவவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க இந்த செயற்பாடு அவசியமாகும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையானது தொடர்ந்து இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் கண்காணிக்கவேண்டும்.