அரசியல்வாதிகளின் துணையுடன் வவுனியாவில் காணிகள் அபகரிப்பு : வட மாகாண சுகாதார அமைச்சர் ஆதங்கம்

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=244602717811376668#sthash.AZvAh9Mf.dpuf
09 மார்ச் 2014, ஞாயிறு
வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பாவற்குளத்தில் உள்ள நூறு ஏக்கருக்கு டு வருகின்றது என பொது மக்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாக வமேற்பட்ட காணிகள் இராணுவ குடியிருப்பு அமைப்பதற்காக மிகவும் சூசகமான முறையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தயகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகும். இப்பகுதியில் தமிழ்மக்கள் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொண்ட வந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக வேறுபகுதிகளுக்கு இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏறக்குறைய நூறு ஏக்கரிற்கு அதிகமான காணிகளை சுவீகரித்து இராணுவ குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இராணுவத்தின் உதவியுடன் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திலுள்ள இந்த கிராமத்தின் காணியை அரசாங்க நில அளவையாளரை கொண்டு அளவீடு செய்ய வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளரின் கோரிக்கையின் பிரகாரம் காணி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காணி எல்லைகள் சிங்களப்பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராமசேவகர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்களால் இனங்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதியின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து காணி வழங்கல் தொடர்பான நியமங்கள் எதுவும் பின்பற்றப்படாமல் இரகசியமான முறையில் இந்த காணி சுவீகரிப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் பின்னணியில் அரசாங்க கட்சியின் சில அரசியல்வாதிகளும் துணைபோவதாக தெரிய வருகின்றது. இதுதொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்காக இந்த விடயத்தை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன் என்று தெரிவித்தார்.