Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 22, 2014

[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 08:05.40 AM GMT ]
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
போருக்கு பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை இந்த குழு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் வழங்கியுள்ளது.
40 தமிழர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நேர்காணல்களை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை இங்கிலாந்து மனித உரிமை குழு தயாரித்துள்ளதாக தி காடியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் பலர் அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்கள் இலங்கையில் பல்வேறு சித்திரவதைகளுககு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மனித உரிமை குழுவின் இந்த அறிக்கையை இலங்கைக்கு எதிரான மேற்குலக நாடுகள் வெளியிட்டுள்ளன.
110 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தென் ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண் டுட்டுவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
போருக்கு பின்னர், கட்டாய வாய்வழி புணர்ச்சி, குதவழி வல்லுறவு, தண்ணீர் சித்திரவதை உள்ளிட்ட பாலியல் மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களின் சாட்சியங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் அவுஸ்திரேலியா தமிழர்களை நாடு கடத்துவது தொடர்பிலும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமை குழு, மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூகா, உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கை தயாரித்துள்ளனர்.
இரும்பு குழாய்களினால் தாக்கப்பட்ட, சிகரெட்டுக்களால் சுடப்பட்ட மற்றும் சூடான பொருட்களினால் உடலில் முத்திரை பதிக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களின் சாட்சியங்கள் இதில் உள்ளடக்கப்படடுள்ளன.
இலங்கை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 40 பேரிடம் இருந்து பெறப்பட்ட விசாரணை நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சித்திரவதைகளும் கிட்டத்தட்ட சில பாலியல் வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள். இலங்கை திரும்பிய இவர்களிடம் தஞ்சம் பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இருக்கு நெருக்கமான உறவுகள் பற்றி விசாரிக்கப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு முதல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களில் பலர் சட்டத்தரணிகளின் அணுகலுடனோ அல்லது சாதாரண விதிமுறைகளின் அடிப்படையிலோ அணுகப்படவில்லை.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகளில் இந்த அறிக்கையானது சிறிய மாதிரி மாத்திரமே என யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் தற்போதே செயற்பட வேண்டும். இல்லையெனில் இவ்வாறான அட்டூழியங்கள் மோதலுக்கு பின்னரான இலங்கையில் வரையறையின்றி தொடரும் என்றும் சூகா கூறியுள்ளார்.