இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன் வைக்கப்படவுள்ள தீர்மானத்தின் இரண்டாவது வரைவு திட்டமிடப்பட்டபடி வெளியானது. இந்த வரைவு, இலங்கையில் நடந்த மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என் பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
முதலாவது வரைவில் திருப்தி யில்லை என்று தமிழர் தரப்பில் எழுப்பப்பட்ட கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தூதர்களைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரை யாடியபோது வலியுறுத்திய விடயங்களும் இரண்டாவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஜெனிவாவில் நிற்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பிரேரணையின் அனைத்து அம்சங்களையும் கவனித்து நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அந்தத் திட்டத்தின் செயற்பாட்டை முழுஅளவில் விரிவுபடுத்த வேண்டும் என்ற புதிய தொடர் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமை வாக வடக்கு மாகாண சபை திறம்பட செயற்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசைக் கோருகிறது. - என்ற வகையில் ஆறாவது செயற் பாட்டுப் பந்தி திருத்தப்பட்டுள் ளது. முன்னைய நகலில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் தேவைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் தேவையான வளங்களையும், அதிகாரங்களையும் வழங்க இலங்கை அரசை ஊக்குவிக்கிறோம். - என்றிருந்த வாசகம் இப்போது மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்படி திட்டவட்டமாக அரசைக் கோரும் விதத்தில் அமைந்துள்ளது.
முதலாவது நகல் பிரேரணையில் செயற்பாட்டுப் பந்தி 8 இலேயே இலங்கை அரசு மீதான தாக்கமான பிரேரணை வாசகம் அமைந்திருந்தது. தற்போது திருத்தப்பட்ட இரண்டாவது நகல் பிரேரணையில் அது மேலும் இறுக்கமாக - வெளிப் படையாக - அமையும் வகையில் பின்வருமாறு திருத்தப்பட்டிருக்கின்றது:-
தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் தெளிவான பேறுகளைத்தரக் கூடிய தேசிய மட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமாகின்றது என்ற ஆணையாளரின் பரிந்துரையையும் முடிவை யும் கவனத்தில் எடுத்து -
அ) இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட தேசிய மட்ட நட வடிக்கையின் முன் னேற்றத்தை மதிப்பிட்டு
க் கூறலை உறுதிப்படுத்தும் வகையிலும், அத்தகைய மீறல் கள் இடம்பெற்றமை தொடர்பான உண்மைகளையும், சூழ்நிலை சந்தர்ப்பங்களையும், சம்பந்தப்பட்ட நிபுணர் களின் உதவியைப் பெற்று நிலைநிறுத்தும்படியும் -
இ) தற்போதைய இந்தப் பிரே ரணையின் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மனித உரிமைகள் சபைக்கு அதன் 27 ஆவது அமர்வில் வாய் மூல அறிக்கையையும், 28 ஆவது அமர்வில் தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெறக்கூடிய விதத்தில் பரந்தளவிலான எழுத்து மூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு - ஆணையாளரைக் கோருகிறோம். - என்று அந்த 8 ஆவது பந்தி திருத்தப்பட்டிருக்கின்றது.
இம்மாத ஆரம்பத்தில் அமெ ரிக்கா, பிரிட்டன், மொறீஸி யஸ், மொண்டிநிக்ரோ, மஸி டோனியா ஆகிய நாடுகள் கூட்டாக முனவைத்த முதல் வரைவு வாசகங்கள், பல நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி தற்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த புதிய வடிவத்திலேயே, இலங்கையை மேலும் இறுக்கும் வகையில் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் ஆணையாளருக்குத் திட்டவட்டமான ஆணைகளை மனித உரிமைகள் சபை வழங்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
தமது பிரேரணையின் முதல் நகல் வடிவம் தொடர்பில் பல்வேறு நாடுளினதும் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள் வாங்குவதற்காக பரந்தளவி லான இரண்டு கலந்துரையாடல்களை அமெரிக்கா, பிரிட் டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே நடத்தியிருந்தன. எதிர்வரும் 18ஆம் திகதி இறுதியான கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதன் பின்னரே தீர்மானத்தின் வரைவு இறுதி செய்யப்படும்.
இரண்டாவது வரைவில் இலங்கை அரசின் செயற்பாட்டை வரவேற்கும் என்பது காணிப் பாவனை மற்றும் உரிமை என்று மாற்றப்பட்டுள்ளது. சிவில் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல், பதிலடி நடவடிக்கைகள் தொடர்பாகக் கவலை தெரிவித்திருக்கும் வாசகத்தில் ‘ஐ.நா. மனித உரி மைகள் பொறிமுறையுடன் ஈடுபட்டு பணிபுரிவோரும்’ அத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்வது பற்றிய குறிப் பும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட்ட சிறு பான்மை மதக்குழுவினர் மீதான தாக்குதல் குறித்து அபாய எச்சரிக்கை எழுப்புகின்ற வாசகத்தில், தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அலையாக’ எழுந்திருப்பது பற்றிய சொற்றொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசியத் திட் டம் தொடர்பான பிரேரணை வாசகத்தில் அந்த ஆணைக் குழுவின் பரிந்துரைகளின் அனைத்து அம்சங்களையும் கவனித்து நடவடிக்கை எடுக் கும் விதத்தில் அந்தத் திட்டத் தின் செயற்பாட்டை முழு அள வில் விரிவுபடுத்த வேண்டும் என்ற புதிய தொடர் சேர்க்கப் பட்டுள்ளது.
இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமை வாக வடக்கு மாகாண சபை திறம்பட செயற்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசைக் கோருகிறது. - என்ற வகையில் ஆறாவது செயற்பாட்டுப் பந்தி திருத்தப்பட்டுள்ளது. முன்னைய நகலில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் தேவைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் தேவையான வளங்களையும், அதிகாரங்களையும் வழங்க இலங்கை அரசை ஊக்குவிக்கிறோம்.- என்றிருந்த வாசகம் இப்போது மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப் படுத்தும்படி திட்டவட்டமாக அரசைக் கோரப்பட்டுள்ளது.
முதலாவது நகல் பிரேரணையில் அரசின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள 8 இலேயே இலங்கை அரசு மீதான தாக்கமான பிரேரணை வாசகம் அமைந்திருந்தது. தற்போது திருத்தப்பட்ட இரண்டாவது நகல் பிரேரணையில் அது மேலும் இறுக்கமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரைவு அப்படியே நிறைவேற்றப்பட்டால் மனித உரிமைகள் சபையால் எடுக்கப் படக்கூடிய அதிஉச்சமான பெறுபேறாக அது இருக்கும் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அடுத்தடுத்த வரைவுகளில் தீர்மானம் இன்னமும் நீர்த்துப்போகச் செய்யப்படலாம் என்பதும் கவனத்துக்குரியது என்று சுட்டிக்காட்டினார் அவர்.