Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, March 12, 2014

சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவம் வரக்கூடாது; விரைவில் மாகாணசபையில் தீர்மானம்
news
logonbanner-1வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எமது தலைமைகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினார் அதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமானவே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் நிகழ்வுகளில் இராணுவம் தலையீடு செய்வது குறித்து தூதுவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். எனினும் எமது ஆளுகைக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இராணுவம் பிரசன்னமாவதை தவிர்க்குமாறு எம்மால் தெரிவிக்க முடியும் .

எனினும் இது நான் மட்டும் முடிவு செய்யும் விடயம் அல்ல. எமது கட்சித் தலைமைகள் மற்றும் முதலமைச்சருடன் கலந்துரையாடியே முடிவு எடுக்க வேண்டும்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சிற்கும் இந்த விடயம் தொடர்பிலும் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதிர்வரும் வடக்கு மாகாண சபை அமர்வுகளில் இதற்கான தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவர யோசனை ஒன்றினை முன்வைப்பேன். இவ்வாறான இராணுவ தலையீட்டினால் சுதந்திரமாக செயற்படவோ கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபை செயற்படுவதற்கு முன்னர் பாடசாலை மற்றும் திணைக்களங்களின் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கக்கூடாது என அளுநர் கட்டுப்பாடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=689372722711813242#sthash.82Vb0ews.dpuf