சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட மக்கள் தமக்கு சொந்த காணி வேண்டும், 50 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம், எமக்கு தீர்வு எப்போது? , அரச அதிகாரிகளே நீங்கள் வந்து எமது குடியிருப்பை பாருங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=715202764322610209#sthash.1vdKAtFj.dpuf
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 8.30 மணியில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட மக்கள் தமக்கு சொந்த காணி வேண்டும், 50 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம், எமக்கு தீர்வு எப்போது? , அரச அதிகாரிகளே நீங்கள் வந்து எமது குடியிருப்பை பாருங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி.அ.சாந்தசீலன்,
கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் படி கடலிலிருந்து 200 மீற்றர் தூரத்திற்குள் மக்கள் குடியிருக்க முடியாது. எனவே அப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு வேறு பிரதேசங்களில் காணிகள் வழங்கப்படும். 200 மீற்றருக்கு அப்பால் வசிப்பவர்களுக்கு மட்டும் அந்த இடங்கள் சொந்தமாக வழங்கப்படும். மேலும் இப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.