Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, March 9, 2014



[ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 06:22.20 AM GMT ]
இலக்கத்தகடு இல்லாத பஸ் ஒன்றை ஓட்டிச் சென்று போக்குவரத்துச் சட்டங்களை மீறிய சாரதி ஒருவர், அதிகாரிகளின் எந்த எதிர்ப்புமின்றி நேற்று கொழும்புக்கு வெளியில் கொட்டாவையில் இருந்து கடுவலை வரையான தனது பயணத்தை நிறைவு செய்தார்.
போக்குவரத்துச் சட்டத்தை மீறிய இந்த சம்பவம் பலரது மத்தியில் வைபவ ரீதியாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு போக்குவரத்துச் சட்டத்தை மீறியவர் வேறு யாருமல்ல, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவர்.
அவர் ஓட்டிச் சென்ற பஸ் வண்டியில் இலக்கத் தகடு இருக்கவில்லை என்பதுடன், சாரதி கட்டாயம் அணிய வேண்டி ஆசன பட்டியையும் அவர் அணியவில்லை.
அத்துடன் பஸ்ஸில் பயணிகளை நிற்க வைத்து அழைத்து செல்லக் கூடாது என்ற சட்டத்தையும் அவர் மீறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டின் சட்டத்திற்கு அடிப்பணிந்தவர் அல்ல.
போக்குவரத்துச் சட்டம் அல்ல, கொலைக் குற்றம் செய்தாலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.