யாழ் கொழும்பு பஸ் மீது காடையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=490842704405122508#sthash.XOrf43Ur.dpuf
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயனித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேரூந்து இன்று நள்ளிரவு காடையர்களால் இடை மறித்து தாக்கப்ட்டது.இருப்பினும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பயணிகளுடன் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அளவெட்டியை சேர்ந்த தனியார் பேரூந்தே இவ்வாறு காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில்..
குறித்த பேரூந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் இன்று நள்ளிரவு 11 மணியளவில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் கத்தி மற்றும் தடிகளுடன் வந்த இனம் தெரியாத காடையர்களால் இடை மறித்து தாக்கப்ட்டுள்ளது.காடையர்கள் பயணிகளை அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களை பேரூந்தில் இருந்து கீழ் இறக்கி ஓட ஓட கலைக்கப்பட்டதாகவும் சிறிது தூரம் ஓடி சென்று வேறு பேரூந்தில் தாம் ஏறியதாகவும் குறித்த பேரூந்தில் பயணித்த பயணி ஓருவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர்கள் காடையர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகவும் பேரூந்து தற்போது கொச்சிக்கடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேறு சாரதி ஒருவர் உதயனுக்கு தெரிவித்தார்.