Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, February 22, 2014

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன;கூட்டமைப்பு குற்றச்சாட்டு
news

logonbanner-119 பெப்ரவரி 2014, புதன்
வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திபெத்தில் சீனர்களின் குடியேற்றத்தைப் போன்றும் பலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றத்தைப் போன்றும் செயற்பட்டு வடக்கு கிழக்கில் சிங்களவர்களைச் குடியேற்றி சிறுபான்மையினரை இல்லாதொழிக்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது

ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

அவற்றுக்கு வெறுமனே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்காது அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முற்படுமேயானால்  அரசி மீதான அரைவாசி அழுத்தம் குறையும்

இதேவேளை அரசாங்கம் விரும்பியிருந்தால் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டிருக்க முடியும். இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றியிருக்க முடியும்.

நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நிலையான தீர்வொன்றையும் முன்வைத்திருக்க முடியும்.  எனினும் அதனைச் செய்யாது இராணுவத்தின்  உதவியுடன் தமிழர்களை கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் மனம் நோகாமலும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே  காணி சுவீகரிப்புகள் இடம்பெறும் என்று காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இங்கு கூறினார். அவரது கூற்று சிங்களவர்களுக்கு  மாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

வடக்கு ,கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்படுகின்றன. அப்படியானால் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் மிருகங்களா எனக் கேட்கின்றேன்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அநீதி இழைக்கப்படுவதாக உலகு எங்கும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரப்படுகின்றது. கால அவகாச கால்பகுதியில்  தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை பறிமுதல் செய்யும் செயற்பாட்டில் அரசு செயல்படுகின்றது. அதுமாத்திரமின்றி காணிகளையும் பறிமுதல் செய்வதோடு தமிழ் மக்களை நாட்டை விட்டே வெளியேற்றுகின்றது.

அரசாங்கத்தினதும் கடற்படையினரதும் திட்டமிடப்பட்ட செயற்பாட்டின் அடிப்படையில் படகுகள் மூலம் தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். தமிழ் மக்களின் விவசாய நிலங்கள், வாழ்வாதாரங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

இங்கு சீனாவைப்பற்றி புகழ் பாடப்படுகின்றது. ஆனால் இதே சீனாதான் திபத்தியர்களை வெளியேற்றி சீனர்களை குடியேற்றியது. அதே போன்று பலஸ்தீனத்தில் யூதர்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர்.

அந்த வகையில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பான தனது அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கமும் அமைச்சர்களும் பதில்களையே கூறிக்கொண்டிருப்பர்.

இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினால்  பிரச்சினைகளில் அரைவாசிக்காவது தீர்வு கிடைக்கும். சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் எதுவும் இடம்பெறாது என்ற நிலையே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


‘Government is trying to Sinhalise the country’ - TNA MP


21 February 2014
TNA MP Suresh Premachandran stated that the Sri Lankan government was trying to 'Sinhalise' the whole island, as he condemned the government’s grabbing of traditional Tamil land in the North-East.

According to a report in the Uthayan, Premachandran compared stated that Tamil people were having their land taken against their will, with the help of the armed forces and at many times at gun point. He went on to state the government was attempting to ‘Sinhalise’ the whole island, comparing the situation to that of the Chinese in Tibet and the Jews in Palestine.

Premachandran added that in the meantime, the government was attempting to deport Tamils, referring to the Navy’s alleged involvement in people smuggling schemes.

The TNA MP went on to add that the recommendations from UN High Commissioner for Human Rights Navi Pillay’s report had to be implemented, but noted that without international pressure that was impossible.

See the report from the Uthayan here.