மண்டேலாவிற்கு கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலி
15 டிசெம்பர் 2013, ஞாயிறு

தென்னாபிரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எற்பாட்டில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10மணிக்கு மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. மண்டேலாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலியை செலுத்தினர்.
நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் க.சிவஞானம், வடமாகாண உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஆனல்ட், கஜதீபன், சகிர்தன் ஆகியோரும் பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இரங்கல் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நெல்சன் மண்டேலா போராடியவர்.அதன்படி இவர் பயங்கரவாதி எனப்பட்டம் சூட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் விடுதலைக்காக போராடி நாட்டினை விடுதலையடையச் செய்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தனது பணியை செய்து முடித்தவர் மண்டேலா.
கடந்த 5ஆம் திகதி இவ்வுலகை விட்டு சென்ற மறைந்த மண்டேலாவிற்கு இன்று அவரது கிராமமான கிழக்கு கேப்பில் உள்ள கியூனுவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=232822511616759287#sthash.rg5TWMi3.dpuf