11 வயதில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று தமிழ்ச் சிறுமி சாதனை -

பானகமுவ நிருபர்
ஒன்பது வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்த சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தைப் பெற்று தாய் மண்ணுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
இந்தச் சிறுமி விளையாட்டுப் பொருட்களுடன் நேரத்தை கழிக்காமல் கூடுதலான காலத்தை தகவல் தொழில் நுட்பப் பாடத் துறையில் சாதனைப் படைப்பதற்காக கழித்து அயராத முயற்சியினால் இந்தச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
பிரேமானந்த் நடராஜ் லக்சுமி தம்பதியின் ஏக புதல்வியான இந்தச் சிறுமி கண்டியிலுள்ள , கொழும்பு சர்வதேச பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயில்கின்றார். 2002.05.13 ஆம் திகதி பிறந்த இச் சிறுமி தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்கை நெறி சங்கத்தின் (BCS IT Degree) பட்டத்தைப் பெற்றுள்ளார். இவருக்கான பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பட்டப்படிப்புத் தொடர்பான பெறுபேறு இணையத்தளத்தினூடாக கடந்த வியாழக்கிழமை வெளியாகியது. இந்தச் சிறுமி மூன்று வயதிலேயே மின்னஞ்சல் முகவரியைத் திறந்து கொண்டார். சர்வதேச கணினியியல் டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார்.
வணிகம் இணையத்தள பொறியியல் துறைகளில் சர்வதேச தரச் சான்றிதழ்களை தன்னுடைய ஒன்பதாவது வயதிலேயே பெற்றுள்ளார். அதேபோன்று சிறு வயதிலேயே இணையத் தளத்தை வடிவமைத்தமைக்கான பெருமையும் இந்தச் சிறுமியையே சாரும்.
இதில் இரண்டாம் இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்தக் கால எல்லைக்குள் கண்டி நகரிலுள்ள கணினி உயர் கல்வி நிலையங்களில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினி கற்கை நெறி சங்கத்தின் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்து 2 1/2 வருட காலத்திற்குள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து கொண்ட இவர் 11 ஆவது வயதில் பட்டம் பெற்றவர்களில் உலகில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
2013-12-18 16:24:12 | General