Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, September 5, 2013

Lankan self immolated in Geneva
[ Thursday, 05 September 2013, 12:19.34 PM GMT +05:30 ]
SriLankan immolated himself at 1.00 am in Geneva today, sources said.
We are unable to receive further information’s on this self immolation.

(2ம் இணைப்பு) ஜெனிவாவில் இலங்கையர் நள்ளிரவில் தீக்குளிப்பு? உறுதிப்படுத்திய காவல்துறை! காரணம் மார்மம்
Canadamirror.comjvpnews_geneva

September 05, 2013
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன. இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இத் தகவலை உறுத்ப்படுத்தியுள்ள எமது புலனாய்வுச் செய்தியாளர் இதில் இறந்தவர் தமிழரா அல்லது சிங்களவரா என்பதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளதுடன் நவிப்பிள்ளையின் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கருத்திற்கு இலங்கைக்கு ஆதரவாக சிங்களவர் ஒருவர் தீக் குளித்ததாகவும் மற்றய கருத்து தமிழருக்கு நீதியான தீர்வுக்காக தமிழர் ஒருவர் தீக் குளித்ததாகவும் அவர் அருகில் புலிகளின் தலைவரின் படம் கிடந்ததாகவும் ஜெனிவா நகரத் தகவல்கள் தெரிவித்தாலும் இதனை உறுதிப்படுத்த ஜெனிவா காவல் துறையை தொடர்புகளை ஏற்படுத்திய நிலையில் விசாரணை முடியாமல் கருத்துக் கூற முடியாது என கூறியதுடன் இலங்கையர் ஒருவர் தீக்குளித்ததை உறுதிப் படுத்தினர்
மேலதிக விபரங்கள் காலக் கிரமத்தில் இணைக்கப்படும்
(2ம் இணைப்பு)
jvpnews_geneva1ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அலுவலகத்திற்கு முன்னால் இருக்கும் மைதானத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஒருவர் தீக்குழித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவில்லை. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஜெனிவாவில் இருக்கும்  இலங்கையரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தினர்.
2009ஆம் ஆண்டு முருகதாஸ் தீக்குளித்த இடத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.