தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றி!
முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் விருப்புவாக்குகளில் முதலிடம்
22 செப்ரெம்பர் 2013, ஞாயிறு 5:25 பி.ப
தொடர்ச்சியாக பாலச்சந்திரன் கஜதீபன் 29,669 விருப்பு வாக்குகளையும் இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும் கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகளையும் எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும் ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும் எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும் கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும் விந்தன் கனகரத்தினம் 16,463 விருப்பு வாக்குகளையும் ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும் வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஜ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை யாழ்.மத்திய கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.