[ Wednesday, 28 August 2013, 12:53.26 PM GMT +05:30 ]
Inspector of Jaffna police Saman Chickero said Kodigaamam and Chavakatchcheri police officers conduct further investigations on this shooting incident and arrested suspect.
In the recent past internal clash rose between members of same party in the Jaffna peninsula.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பிரதேசத்தில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட சர்வானந்த் என்ற வேட்பாளரின் அலுவலகத்திற்கு முன்பாக, அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் சுமார் 7 பேர் வாகனங்களில் வந்திறங்கியிருக்கின்றனர். இறங்கியது மட்டுமல்லாமல் குறித்த வேட்பாளரின் பெயரை கூறி ஏளனமாக பேசியுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த கொடிகாமம் பொலிஸாரும், அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் சர்வானந்தின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து என்ன பிரச்சினை? எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? என கேட்டவுடன் அங்கஜனின் தந்தை இராமநாதன் வழக்கம்போல், தனது கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் சர்வானந்த் என்பரின் ஆதரவாளர் சிறி என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை முடித்துக் கொண்டு இராமநாதன் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவரை பிடிக்க முயன்ற சர்வானந்தின் ஆதரவாளர்கள் மீது கொடிகாமம் பொலிஸார் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்ற பகுதி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். எனினும் சர்வானந்தின் ஆட்களே தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கஜன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சாவகச்சேரி நகரப்பகுதி, மற்றும் கைதடி பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பிடமும் துப்பாக்கியும், அதனை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமையும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.27 Aug 2013