இன்று கொழும்பு நகரை முடக்கிய யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் தாம் பெரிதும் வதைக்கப்படுவதாக இராணுவச் சிப்பாய்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதில் தமது படைப் பிரிவுகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு பிரிவினரும் அணி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் பல மணி நேரம் இத்தகைய அணிவகுப்பில் ஈடுபட்டமையால் பெரிதும் களைப்படைந்து சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டனர்.
காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த அணி வகுப்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை அண்டியே முடிவடைந்தது. அங்கு முடியும் தருவாயில் பல இராணுவ சிப்பாய்களின் முகங்களில் யுத்த வெற்றி விழா குறித்த வெறுப்புத் தன்மையைக் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான இராணுவச் சிப்பாய்களிடம் கேட்ட போது,
அவர்கள், “எங்களை வைத்து இந்த அரசு அரசியல் லாபம் காண்கிறது” என்றும், இந்த யுத்த வெற்றி விழாவையிட்டு எம்மை சில நாட்களாக பெரிதும் வதைத்துள்ளனர்.
இந்த விழாவுக்கான அணி வகுப்பிற்காக நாம் எமது உடலால் மாத்திரமின்றி மனசளவிலும் சோர்ந்த நிலையிலேயே பயிற்சிகளை மேற்கொண்டோம்.
எமது கைகளில் பெருமளவிலான சுமைகளைச் சுமத்தி வீதி நெடுகிலும் அணி வகுப்பாக நடக்கவிடும்போது நாம் படும் துன்பம் சொல்லிட முடியாது.
யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கி காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமல் போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலம் மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.
படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 |
| Sri Lankan President Mahinda Rajapaksa, wearing a scarf, rides on a jeep with commanders of security forces as he inspects a guard of honor during a war victory parade in Colombo, Sri Lanka, Saturday, May 18, 2013. The military parade is being held to commemorate the 4th year anniversary of the government's victory over Tamil Tiger rebels.Photo - Reuters |
|
 :Colombo Sri Lanka's navy Sunday recovered the body of a sailor who drowned during a parade marking the fourth anniversary of the defeat of Tamil Tiger rebels, an official said.
The body was found near a beach in Colombo where his small boat capsized while taking part in the victory celebrations presided over by President Mahinda Rajapakse on Saturday.
"The boat was salvaged on Saturday and four crewmen were rescued, but one officer went missing and his body was recovered only this morning," a military official said on condition of anonymity, adding that the boat had got into trouble in choppy waters.
Rajapakse, who addressed troops at the land and sea parade, vowed not to allow the Tamil Tiger rebels or any other separatist group to create trouble in the ethnically dived nation of 20 million people.
His troops declared an end to 37 years of ethnic bloodshed after killing the top Tamil Tiger leadership in May 2009.
In the north the main opposition ethnic Tamil political party, the Tamil National Alliance (TNA), defied a military ban and staged a remembrance ceremony for those who died in the final battle which also killed Tigers leader Velupillai Prabhakaran.
TNA officials said the main memorial event in the town of Vavuniya went off without incident despite army threats to arrest participants. But in the adjoining district of Mannar, police briefly detained mourners.
The military offensive which crushed the Tigers triggered allegations of war crimes. Rights groups said up to 40,000 civilians perished in the last months of fighting, a charge denied by Colombo. |