Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, December 5, 2012

TID officials arrest 10 individual​s in Jaffna
[ Wednesday, 05 December 2012, 04:10.09 PM GMT +05:30 ]
TID officials suddenly arrested 10 Individuals at Jaffna district and taken them towards Colombo, sources said.
Group of TID officials arrive from the Colombo last afternoon visited to the Chavakatchcheri and Kopai police stations and hold investigations against these members.
Coordinator of the Jaffna district T.Kanagaraja stated all these members were arrested under the prevention of terrorist act and the complaint this regard has been lodged at the Human Rights Commission.
He also stated he received complaints about 5 individuals at Chavakatchcheri area and 2 from Kopai area. Relatives of the victims visited the Jaffna police head quarters last evening and questioned about this arrest. However police officials stated they were unaware in this arrest and also they were not permitted to release further information’s this regard.
Previously police officials have ordered these victims to visit Jaffna and Kopai police stations for investigations. It was revealed these rehabilitated victims have recently arrived from the Vanni district and resettled in the Jaffna, sources said.

யாழில் ரி.ஐ.டி யினால் 7 பேர் கைது; எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம் என சந்தேகம்
news
logonbanner-1சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் பகுதிகளில் இருந்து 7 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார். 
 
நேற்று பிற்பகல் கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த இவர்கள் வரவழைக்கப்பட்டு கொழும்பில் இருந்து வந்த குற்றத்தடுப்புப்  புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 
 
முறைப்பாட்டில் 5 பேர் கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் 2 பேர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டு குறித்த பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
அதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இவர்கள் வன்னியில் இருந்து வந்து யாழில் மீளக்குடியமர்ந்தவர்கள் என்றும் இவர்கள் கோப்பாய், உரும்பிராய் மற்றும் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
 
இருப்பினும் கோப்பாய், சாவகச்சேரி மற்றும் யாழ். பொலிஸ் பிரிவில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதுவரை 7 பேர் தொடர்பிலேயே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும் இது குறித்து பொலிஸ் நிலையங்களில் தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறித்து தமக்குத் தெரியாது என்றும்  தெரிவித்துள்ளனர்.