Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, October 24, 2012

Sampanthan trusts India to take up the Tamil issue

இனப் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை விரைவில் இந்தியா எடுத்துக்கொள்ளும்; சம்பந்தன் நம்பிக்கை தெரிவிப்பு
news
logonbanner-1இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்  உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் புதுடில்லிக்கு பயணம் செய்திருந்தது.

இந்நிலையில், தமது புதுடில்லிப் பயணம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
அத்துடன், இதற்காக என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன் எனவும் மன்மோகன் சிங் கூறினார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய வாக்குறுதியுடன் நாம் இந்திய மக்களவையின்  எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜைச் சந்தித்தோம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதி தொடர்பில் கருத்து வெளியிட்ட சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு நாடு என்ற வகையில் இதுவே இந்தியாவின் நிலையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

"இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழக அரசு மட்டும் கரிசனை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இலங்கைத் தமிழ் மக்களின் பக்கம் உள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அனைத்து மாநிலங்களும் உள்ளன'' என்றும் சுஷ்மா சுவராஜ் எம்மிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை சாதகமானதாக இருக்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பொறுப்பை அவர்கள் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நான் கருதுகிறேன்.

எமது கோரிக்கைகளும் நிலைப்பாடுகளும் நியாயமானவை என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடக்கூடாது என உணர்கின்றார்கள். இலங்கை அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக எம்முடன் பேசிய ஒரேயொருவர் பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே. எம்முடனான பேச்சின் தொடக்கத்தில், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், இலங்கை அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தன்னுடன் பேசியதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ஆனால், அது தொடர்பிலான தகவலை அவர் எமக்குத் தெரிவித்தாரே ஒழிய, எம்மை  நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்  தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியத் தரப்பில் எவரும் எமக்குப் பரிந்துரைக்கவில்லை.

இந்தியாவுக்கு நாம் முன்னர் மேற்கொண்டிருந்த பயண்ங்களைவிட இம்முறை மேற்கொண்ட பயணம் மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய பயணமாக அமைந்திருந்தது என்றார்.       

Sampanthan trusts India to take up the Tamil issue
Tamil Guardian 22 October 2012
The leader of the TNA, R. Sampanthan, has affirmed his faith in India to take up the Tamil issue on the island of Sri Lanka, reported Uthayan.
Delivering a statement on the recent trip of a TNA delegation to New Delhi, Sampanthan is reported to have said:

“Indian Prime Minister Manmohan Singh has given his assurance that India will take responsibility in ensuring that the Tamil people in Sri Lanka can live with justice, dignity and self-respect. Manmohan Singh said that he will do everything he can for this.”
“Upon meeting leader of the opposition, Sushma Swaraj, we were reassured that this would remain the case regardless of regime changes in India. She further said that it is not just the Tamil Nadu government that is concerned about the Tamils in Sri Lanka. Each state in India is on the side of the Tamil people. Ms Swaraj told us that all Indian states are committed to resolving the problems of the Tamils in Sri Lanka.”
“India’s attitude to the problems of Tamil people is a sympathetic one. I believe that they will soon take up responsibility in finding a solution to these problems.”

“Having understood that our demands and stances are justified, I feel that they should not let this opportunity go amiss. The only individual to talk to us about Sri Lanka’s proposed Parliamentary Select Committee (PSC) was PM Manmohan Singh. He stated that the Sri Lankan government had spoken to him before our talks, about finding a political solution to the ethnic issues and about the PSC.”
“However, he simply informed us of the details of the PSC, but made no attempt to persuade us to participate. In fact, no-one on the Indian side recommended participation in the PSC.”
“We are much more enthusiastic and motivated by this recent trip to India, than any other trip we have undertaken in the past.”