Saturday, July 2, 2016

12 நாடுகள் ஹைப்ரிட்

 நீதிமன்றத்துக்கு ஆதரவு!



01-Jul-2016 
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என 12 நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளன.

இவற்றுள், பிரான்ஸ், மெசிடோனியா, செக் குடியரசு, அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, மொன்டனிக்ரோ, நோர்வே, கனடா, எஸ்டோனியா, அல்பேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பிரதானமானவை.

இதுவரை இடம்பெற்ற நாடுகளின் கருத்துரைகளின்படி, அவுஸ்திரேலியா மட்டும் இலங்கைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.