
கடந்த வருடம் கொங்கிரிட் வீதியாக மாற்றப்பட்ட இவ்வீதிகள், தற்போது வெள்ளம் தேங்கி நிற்கும் வீதியாக காட்சியளிக்கின்றது.
அதுமட்டுமின்றி, தற்பொழுது வீடுகளுக்குள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது.
வீதி செப்பனிடப்பட்டமை தொடர்பில் பலமுறை எமது கிராமத்தின் பல அமைப்புக்கள் சுட்டி காட்டிய போதும் எந்த நடவடிக்கையும் இது வரையில் எடுக்கப் படவில்லை.
வேவில் பிள்ளையார் ஆலயத்துக்கு முன் செல்லும் வீதி (வெள்ள வாய்கள்) ஆனது வெள்ளம் செல்லாமல் குளம் போன்று தேங்கி நிக்கின்றது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வல்வெட்டித்துறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














