Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, June 19, 2014

அல்ஜசீரா வாகனத்தையும் உடைத்த சிங்கள காடையர் வீடியோ இணைப்பு !


TAMILKINGDOM

தமிழால் இணைவோம்


சிறீலங்காவின் களுத்துறை அளுத்கம, மத்துகம, பேருவெல 
பகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்கள் சிங்கள காடையர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் கத்திப் பேசியவாறே இவர்கள் அங்கே வந்து அல்ஜசீராவின் வாகனத்தை தாக்கியுள்ளார்கள். இருப்பினும் இதனை நேரடியாக தொலைக்காட்சியில் கூறமுடியாது என்ற காரணத்தால் அவர்கள் அதனை தவிர்த்துள்ளார்கள். அத்தோடு அல்ஜசீரா வாகனத்தை தாக்கியவர்களின் வீடியோக்களும் உள்ளதாகவும் அதனை பொலிசாரிடம் படப்பிடிப்பு குழுவினர் கொடுத்துள்ளதாகவும் தெரிகின்றது.


நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில், அல்-ஜசீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சென்ற வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. எனினும், அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக, அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதேவேளை, பௌத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதலினால், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள், பள்ளிவாசல்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான உதவிப் பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அளுத்கம, பேருவெல பகுதிகளில், நேற்றுமாலை பதற்றமான சூழல் நிலவிய நிலையில், சிறிலங்கா படையினர் டாங்குகள், கவசவாகனங்களிலும் கால்நடையாகவும்ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.